இலங்கை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்

இலங்கையின் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்கள் தற்போது நியூசிலாந்தில் ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட்  இலங்கையின் நிதியுதவியுடனான இந்த சுற்றுப்பயணம் கடந்த ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமாகியதோடு எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி முடிவடையும்.

குறித்த குழுவில்,சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சீதா அரம்பேபொல, ரோஹினி குமாரி விஜேரத்ன, பவித்ராதேவி வன்னியாராச்சி, கீதா சமன்மலே குமாரசிங்க, டயானா கமகே, தலதா அத்துகோரள, கோகிலா குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க மற்றும் ஹரினி அமரசூரிய ஆகிய 12 பேர் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களின் வேலைத்திட்டத்தில் பலதரப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுடனான சந்திப்புகளும் அடங்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply