பொத்துவில் முஹுது மகா விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவரை தாக்கி 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை அபகரித்துச் சென்ற 8 நபர்களை பொத்துவில் பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களும் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர்கள் 34, 40, 39, 34, 38, 43 மற்றும் 56 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
