உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் உயர்வு: மஹிந்த அமரவீர

நாட்டில் பால் கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்கத்திற்கு சொந்தமான பால் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களில் தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம், 2 மில்லியன் 5 லட்சத்து 99 ஆயிரத்து 617 லீற்றராகவும், மில்கோ நிறுவனம் 1 மில்லியன் 91  லட்சத்து 52 ஆயிரத்து 766 லீற்றராகவும் பால் உற்பத்தியை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 30 சதவீத அதிகரிப்பு என நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாட்டில் திரவப் பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால் பால் மா இறக்குமதியை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், நாட்டில் திரவ பால் உற்பத்தி அதிகரிப்பு தொடர்பில் கூடிய விரைவில் அறிக்கை தயாரித்து தன்னிடம் சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பால் மா இறக்குமதி தொடர்பில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply