கஸகஸ்தானின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீ விபத்தில் 16 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
தீவிபத்தை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் பொதுமக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீயில் அகப்பட்ட குழந்தைகளை மாடி வழியாக வெளியே தூக்கி எறியப்பட்டபோது, கீழே நின்றிருந்த பொதுமக்கள் போர்வை மற்றும் மெத்தைகள் கொண்டு அவர்களை பிடித்து காப்பாற்றினர்.
தீப் பற்றி எரிந்த கட்டடத்தில் இருந்து 300 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் காயமடைந்த 16 குழந்தைகள் உட்பட 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக கஸகஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.