ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னிலஎத்தோ நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்துள்ளார்.
நாட்டின் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் , காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்து மூலிகைகள், மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள் முடங்கியுள்ளமை குறித்து ஆதிவாசிகளின் தலைவரால் பிரதமரிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வசதிகள் இல்லாமை குறித்தும் பிரதமரிடம் தெரிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊருவரிகே வன்னிலஎத்தோ தலைமையில் அனைத்து ஆதிவாசி குடியேற்றங்களின் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து குறித்த பிரச்னைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.