காங்கேசன்துறைக்கும் கல்கிஸ்ஸவிற்கும் இடையில் ‘யாழ்நிலா’ என்ற புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் நேற்று (04) இரவு முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
எனவே இம்மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவிலின் திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த ரயில் இயக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.