ஜப்னா கிங்ஸ்க்கு இலகு வெற்றி

லங்கா பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

நேற்றைய போட்டி கண்டி பல்லேகெலே மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி டைடன்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 12.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

ஜப்னா அணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 54 ஓட்டங்களையும், டவ்ஹித் ஹ்ரிடோய் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply