சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் “குருந்தி விஹார வம்சய” என்ற பெயரில் நூலொன்று வெளியிடப்படவுள்ளது.
கி.மு. முதலாம் நூற்றாண்டில் கல்லாடநாக அரசனால் உருவாக்கப்பட்ட, முல்லைத்தீவு, நாகசோலையில் அமைந்துள்ள குருந்தி விகாரை கட்டடத்தின் சகல தகவல்களையும் உள்ளடக்கிய வகையில், ஐந்து பல்கலைக்கழக நிபுணர்களின் ஆய்வுகளை தொடர்ந்தே இந்த நூலை வெளியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளாார்.
இந்த நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் திங்கட் கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு, துன்முல்ல சந்தியிலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை அமரபுர சங்கசபையின் மகாநாயக்கர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தலைமை தாங்கவுள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வினை, இலங்கை ரமண்ய மகா நிகாயாவின் அனுநாயக்க வலேபொட குணசிறி நஹிமி, ஷ்யாமோபாலிவம்ஷிக மகா நிகாயாவின் பதிவாளர் மெதகம தம்மானந்த நஹிமி, அஸ்கிரி பீடம், மத்திய கலாசார நிதியம் மற்றும் கலாசார முக்கோணத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் வித்யாஜோதி நிமால் டி சில்வா ஆகியோர் நடத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.