அதிக வெப்பநிலைக்கு முகம்கொடுக்கும் தெற்காசிய சிறுவர்கள் – யுனிசெஃப் 

யுனிசெஃப்பின் கூற்றுப்படி, அதிகரித்த வெப்பநிலையால் ஏறக்குறைய அரை பில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இன்று ஒரு செய்தி வெளியீட்டில், யுனிசெஃப் அதன் 2020 தரவுகளின் பகுப்பாய்வில், ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 460 மில்லியன் சிறுவர்கள் ஒரு வருடத்தில் 83 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் 35 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு ஆளாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக  ஆசியா இனங்காணப்பட்டுள்ளது.

உலகளவில்  வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட 32 சதவீத சிறுவர்களுடன்  ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீத சிறுவர்கள் அதிக வெப்பநிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று பகுப்பாய்வு காட்டுவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இப்போது உலகில் அதிக வெப்பமானவை அல்ல, ஆனால் இங்குள்ள வெப்பம் மில்லியன் கணக்கான பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான அபாயங்களைக் கொண்டுவருகிறது என யுனிசெஃப்பின் தெற்காசியாவின் பிராந்திய இயக்குனர் சஞ்சய் விஜேசேகர தெரிவித்தார்.

மேலும், குழந்தைகள், சிறுவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பக்கவாதம் மற்றும் பிற கடுமையான விளைவுகள் உடையவர்கள்  ஆகியோர் இதனால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் நாங்கள் குறிப்பாக கவலைப்படுகிறோம் என்றார்.

சிறுவர்களால் இத்தகைய வெப்பநிலை மாற்றத்திற்கு விரைவாக இசைவாக்கமடைய முடியாததால், நிலைமை மோசமடைகிறது என்று யுனிசெஃப் எச்சரிக்கின்றது.

அதிகரித்த வெப்பநிலையால் மயக்கம் மற்றும் மோசமான மன வளர்ச்சியிலிருந்து நரம்பியல் செயலிழப்பு, வலிப்புத்தாக்கங்கள் மற்றும் இருதய நோய்கள் வரை உயிருக்கு ஆபத்துகள் கூட ஏற்படலாம் .

கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக வெப்பத்தால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் குறைப்பிரசவம் மற்றும் பிரசவம் போன்றவற்றை அனுபவிக்கலாம் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

காலநிலை நெருக்கடி எதிர்காலத்தில் அடிக்கடி மற்றும் நீண்ட வெப்ப அலைகளை மட்டுமே ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுனிசெஃப் தனது அறிக்கையில், தீவிர வானிலையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்கள் என  எச்சரித்தது.

சிறு பிள்ளைகளால் வெறுமனே வெப்பத்தை கையாள முடியாது. நாங்கள் இப்போது செயல்படவில்லை என்றால், இந்தச் சிறுவர்கள் வரும் ஆண்டுகளில் அடிக்கடி மற்றும் கடுமையான வெப்ப அலைகளின் சுமைகளைத் தாங்குவார்கள், அவர்களின் எந்த தவறும் இல்லை. என விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply