சிவாஜிலிங்கத்தின் உறுப்புரிமை பறிக்கப்பட்டதா? வெளியான உண்மை!

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டதாக வெளிவரும்  செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்,13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான – முற்றிலும் நேர்மாறான கோரிக்கையை வலியுறுத்தி மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தர்.

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த நிலையிலேயே கட்சியின் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.கே.சிவாஜிலிங்கத்தை விலகுமாறு கட்சி தலைமையால் கோரப்பட்டிருந்தது.

அவர் பதவி விலகாததை அடுத்து, கட்சியை விட்டு நீக்கப்படுவதாக நேற்று நடந்த கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply