இலங்கையில் பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை திறப்பு

இலங்கையில் முதன்முறையாக பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளது.

பண்டாரவளை, கஹட்டவெலயில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது  பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சாலை கஹட்டேவெல ஸ்ரீ சங்கராஜா ஆலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் சிறிய அளவிலான விவசாய தொழில்முனைவோர் திட்டத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும் இந்த பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமானத்திற்காக 100 மில்லியன் செலவிடப்பட்டது.ஆண்டுக்கு 3,500 மில்லியன் ரூபா செலவில் உருளைக்கிழங்கு கீற்றுகள் தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இந்த நாட்டில் பிரெஞ்ச் ஃப்றைஸுக்கு அதிக தேவை இருப்பதால், உள்நாட்டில் விளையும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு கீற்றுகள் தயாரிக்கப்படுகின்றன. தொழிற்சாலை 250 விவசாயிகளிடமிருந்து உருளைக்கிழங்கை கொள்வனவு செய்கின்றது. மேலும் உருளைக்கிழங்கு கீற்றுகளின் தினசரி உற்பத்தி தோராயமாக 1,000 கிலோ ஆகும்.

இலங்கையின் முதலாவது விவசாய மாதிரி கிராமமான கஹட்டேவெல 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply