வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசுவதாகக் கூறினார். ஆனால், அந்த மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியவில்லையா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ். திஸ்ஸ விகாரையில் சமயக்கிரியைகளில் ஈடுபடமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும், குந்துர்மலையில் பிரச்சினை உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு – கிழக்கில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்கள் எவ்வளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் தெரியுமா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனவே, ஒரு தரப்பினரின் பிரச்சினைகளை மட்டும்பார்க்காமல், அனைத்து இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி, மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.