யாழ்ப்பாணம் – ஓட்டுமடம் மானிப்பாய் வீதியில் உள்ள வீட்டு வளவொன்றில், பிறந்து 2 மாதங்களான சிசுவின் சிதைந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோம்பயன்மணல் இந்து மயானத்துக்குப் பின்னாலுள்ள குறித்த வீட்டின் வளவினுள், சிசுவின் தலையுடன் கூடிய சிதைந்த உடல் பாகங்கள் காணப்பட்டுள்ளன.
தமது வீட்டு வளவுக்குள் அந்த உடல் பகுதியை நாய் இழுத்துவந்து போட்டிருப்பதாக குடியிருப்பாளர் தெரிவித்தார்.
கோம்பயன்மணல் இந்து மயானத்தில் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்படுவதில்லை என்பதால், யாராவது இந்தச் சிசுவின் உடலை மயானத்துக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் என்று அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (D)