இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அரச புலனாய்வு பிரிவின் உயர்அதிகாரிகள் கொரோனா தடுப்பு திட்டம் குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அரச புலனாய்வு பிரிவினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படுவதாக முன்னர் அரசாங்கம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.