பதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜரின் இராணுவத் தலைவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கு உதவுமாறு மேற்கு ஆபிரிக்க தலைவர்களிடம் அந்த நாட்டின் மூத்த இஸ்லாமிய தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
நைஜர் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை நீக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ந்து இராணுவத் தலையீட்டை அச்சுறுத்தும் வகையில், பாஸூமை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.