தேசிய ஒலிம்பியாட் போட்டியில் அக்/அந்நூர் மகா வித்தியாலய மாணவி சாதனை!

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து தேசிய ஒலிம்பியாட் போட்டிக்கு 10மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் இருந்து ஜே. இஸ்ஸத் பானு, எம்.எம். அஹமட் ஆகிய இரண்டு மாணவர்கள் தெரிவாகியிருந்தனர்.
குறித்த பத்து மாணவர்களும் அண்மையில் தேசிய ரீதியில் இடம்பெற்ற ஒலிம்பியாட் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் அட்டாளைச்சேனை அக் /அந்நூர் மகா வித்தியாலய மாணவி இஸ்ஸத் பானு 110மாணவர்களுள் 38வது இடத்தைப் பிடித்துள்ளதோடு, வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இப்போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்கள் பெறப்பட்டுள்ளதுடன், ஆறு வெள்ளிப் பதக்கங்களும், ஒன்பது வெண்கலப் பதக்கங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜே. இஸ்ஸத் பானுவை கெளரவிக்கம் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை முன்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் நாகூர் தம்பி, கணித பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜி.சமூர் ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.றஹீம், பழைய மாணவர்கள் சங்க செயலாளரும் ஊடகவியலாளருமான றிசாத், ஏ. காதர் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அதிபருமான எம்.ஐ.எம்.றியாஸ் மற்றும் உறுப்பினர் கே.கியாஸ் ஆகியோருடன் மாணவியின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அத்துடன் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற சமூக, விஞ்ஞான மற்றும் கணித வினா விடைப் போட்டிகளிலும் பங்குபற்றிய மாணவர்களும் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
,தேவேளை, கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்ட சென் மேரிஷ்கல்லூரி  டீ.எஸ்.பிரித்திக்‌ஷி எனும் மாணவி தங்கப் பதக்கத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply