தேர்தலை நடத்துவது குறித்த இறுதிமுடிவை சுகாதார அதிகாரிகளே எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கம் அந்த விடயத்தில் தலையிடாது என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் சுகாதார அதிகாரிகளின் கருத்தினை மாத்திரம் அரசாங்கம் செவிமடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களது நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த முடிவையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே எடுப்போம் என தெரிவித்துள்ள அவர் கொவிட் 19 குறித்த எந்த முடிவையும் அவர்களே எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுகளில் எந்த அரசியல் நலனும் இல்லை என்ற உத்தரவாதத்தினை வழங்கமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை பிற்போடுவது தொடர்பான எந்த முடிவையும் சுகாதார அதிகாரிகளே எடுப்பாளர்கள் என தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க தேர்தலில் நிச்சயமாக கிடைக்கப்போகின்ற தோல்வியிலிருந்து தங்களை காப்பாற்றுவதற்காகவே எதிர்கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றன என தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றன என தெரிவித்துள்ள அவர் அவர்கள் தங்களின் தோல்வியின் அளவை குறைக்கப்முயல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.