தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான கட்சியாகவுள்ள தொழிலாளர் தேசிய சங்கம் அடுத்தாண்டு மேதினத்தை தனியாக நடத்த ஆலோசித்து வருவதாகவும் இதுகுறித்து அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கியிருந்தன.
தமிழ் முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர் இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்தே மேதினக் கூட்டங்களை நடத்தியிருந்தன.
கடந்த ஆண்டும் தலவாக்கலையில் பிரமாண்டமான மேதினக் கூட்டத்தை நடத்தியிருந்தன.
இந்நிலையில், அடுத்தாண்டு மேதினக் கூட்டத்தை தனியாக நடத்தும் எண்ணத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானமொன்றும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்துமா என்பதை அடுத்து வரும் நாட்களில் அறிய முடியும்.