ஹட்டன் பிரதேச மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஹட்டன் பேருந்து  தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக பேருந்து  நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திருத்த பணிகளின் காரணமாக  பேருந்து தரிப்பிடங்கள் தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய ஹட்டன் பொகவந்தலாவை-மஸ்கெலியா- ஒஸ்போன் – நோட்டன்- காசல்ரீ-சாஞ்சிமலை- ஓல்டன்-போடைஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் ஹட்டன் தபால் நிலையம், சுசி ஆடையகம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹட்டனிலிருந்து- கொழும்பு – கண்டி – தலவாக்கலை- வட்டவளை-நாவலப்பிட்டி- நுவரெலியா-உட்பட அப்பகுதியில் செல்லும் தனியார் மற்றும்  அரச பேருந்துகள் கார்கில்ஸ் புட் சிட்டி அமைந்துள்ள பகுதிகளில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply