காவி உடை தரித்த ஒரு சிலரால் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு பாரிய அச்சுறுத்தல்!

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை நிறுவுவது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காவி உடை தரித்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் தனி மனித சுதந்திரத்திற்கும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கும், நிர்வாகத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக்காலமாகக் காவி உடை தரித்த ஒரு சிலரின் நடவடிக்கைகள் தனி மனித சுதந்திரத்திற்கும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கும், நிர்வாகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்வாறன சொற்பாடுகள் இடம்பெறுவதை நாட்டின் சட்டம் அங்கீகரிக்கப் போகின்றதா என கேள்வியெழுப்பியுள்ளார்.

பௌத்தத்தின் பெயரால் நீதித்துறைக்கும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் ஏனைய சமய தலைவர்களுக்கும் எதிராக செயற்படுவதையும் எந்த சட்டம் அங்கீகரிக்கின்றது என வினவியுள்ளார்.

ஆகவே நாட்டில் மீண்டும் இனவாத மதவாத வன்முறைகள் பலவந்தமாகத் தூண்டப்படுகின்றதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply