பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதி அண்மைக்காலமாகப் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது
இதன்காரணமாக கடந்தமாதம் உள்நாட்டில் விலைவாசி உயர்வைத் தணிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடைவிதித்திருந்தது.
எனினும் அதன்பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தனது அரிசி ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டு வருகின்றது.
உலகளவில் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அரிசியை பிரதான உணவாக நம்பியுள்ள நிலையில், உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40% பங்களிப்பை வழங்கி வருகின்றது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் இந்திய அரசு அரசி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முடிவானது அரிசியைப் பிரதான உணவாக உட்கொள்ளும் நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.