இத்தாலியில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக புலம்பெயர்வோரின் தொகை!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கான அழைப்பினையும் விடுத்துள்ளது.

இத்தாலியின் தெற்குப் புறக்காவல் நிலையமான லம்பேடுசா தீவில், வார இறுதியில் 4ஆயிரத்து 200க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, 53 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக கடல்வழி பயணங்களை மேற்கொண்டு இத்தாலிக்கு வருகை தந்துள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 1இலட்சத்து 7ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply