மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிசு விழாவிற்குத் தடை

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் தூதர்களை நோபல் அறக்கட்டளை புறக்கணித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது.

நோபல் அறக்கட்டளையின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான ரஷ்யவின் படையெடுப்பு, ஈரான் அரசின் மனித உரிமை மீறல் மற்றும் பெலாரஸ் ஜனாதிபதியின் சட்டவிரோத ஆட்சி ஆகியவற்றை கண்டிக்கும் விதமாக இந்த விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, ரஷ்யா, ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் ஸ்டாக்ஹோமில் இடம்பெற உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply