புதிய இராணுவத் தளபதியாக சஞ்சய் வனசிங்கவை நியமிக்க தீர்மானம்!

இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவை நீடிப்பு டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரால் சஞ்சய் வனசிங்க ஒக்டோபர் 13ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்கவின் சேவையை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும், விக்கும் லியனகேவிற்குப் பின்னர் அவரை இராணுவத் தளபதியாக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அவர் எந்தவித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாததும், தனது சேவைக் காலத்தில் ஒழுக்க மீறல்களில் ஈடுபடாததும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

சஞ்சய் வனசிங்க, தற்போது இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.

மேஜர் ஜெனரால் சஞ்சய் வனசிங்க, இராணுவத்தின் இருபத்தி ஏழாவது படைப் பிரிவின் பிரதானி பாடநெறியில் மூன்றாம் இடத்தைப் பெற்றவராவார்.

இலங்கை இராணுவத்தின் பீரங்கி படையைச் சேர்ந்த அதிகாரியான இவர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது, ​​மறைந்திருந்து தாக்குதல்களை நடத்தும் பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.

இலங்கை இராணுவத்தில் ஒரு அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற பின்னர், அவர் இங்கிலாந்தில் உள்ள சாண்டர்ஸ்வித் இராணுவ அறிவியல் கல்லூரியில் தனது உயர் படிப்பபையும் நிறைவுசெய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகித்த தருணத்தில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நல்லுறவு சீர்குலைவதற்கு காரணமான இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக இருந்த டேவிட் கிளாஸ்டனை நாடு கடத்துமாறு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உத்தரவிட்டார்.

அந்த நிபந்தனையின் கீழ் லெப்டினன்ட் வனசிங்கவும் விலகி இலங்கைக்கு வர நேரிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேஜர் ஜெனரால் சஞ்சய் வனசிங்க கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதுடன்,  இவர் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரால் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகனும் ஆவார்.

சஞ்சய் வனசிங்க இராணுவத் தளபதியானால் அது உலக சாதனையாக அமையலாம் என இராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்குக் காரணம், தந்தையும், மகனும் இதுவரை எந்தவொரு நாட்டிலும் இராணுவத் தளபதி பதவியை வகிக்கவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply