இந்தியாவை மறந்து சீனாவை ஆதரிக்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் உலகளாவிய அரசியல் நெருக்கடியை உருவாக்கி வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தை பலப்படுத்துவதில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஆணை இல்லாத அரசு பணக்காரர்களிடம் கடன் வாங்கி நிபந்தனைகளுக்கு உள்ளாக்குகிறது.

இவ்வாறான செயற்பாடுகளினால் சர்வதேச அரசியல் முரண்பாடுகள் உருவாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தை ஒத்திவைப்பதும் அந்தச் செயற்பாட்டின் ஒரு பகுதியாகும்.

நெருக்கடி நிலையின் போது உதவிய இந்தியாவை அரசாங்கம் மறந்து சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதாக கஜேந்திரகுமார் குற்றம்சாட்டினார்.

மேலும், சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, இந்தியாவின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் நெருக்கடியிலிருந்து விடுபட உதவி தேவைப்படும் நாடுகளின் நிபந்தனைகளுக்கு இலங்கை இணங்குகிறது.

தற்போதைய ஆட்சியாளர்கள் பணக்கார அரசிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை நடத்துவதற்கு செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச அரசியலை கையாள்வதற்கு, ஒரு ஆணை கொண்ட அரசாங்கம் இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் பல பெரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை நியமிக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

அதன் பின்னரே ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply