வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி – காணிகளைப் பகிர்ந்தளித்த டக்ளஸ்!

வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

குறித்த பிரதேசம் உயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்து வந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த பெப்ரவரி மாதமளவில் விடுவிக்கப்பட்டிருத்ததுடன், விடுவிக்கப்பட்ட அரச காணிகளை முகாம்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முறையில் காணிகளை தெரிவு செய்து பயனாளர்களுக்கு வழங்கி வைத்த இன்றைய நிகழ்வில் வலி வடக்கு பிரதேச செயலாளர் சிவஸ்ரீ, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் சாந்தாதேவி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் (தோழர் ஜீவன்) மற்றும் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply