யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக நடக்கும் வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக நடக்கவிருக்கும் வீடமைப்பு மற்றும் கட்டுமானக் கண்காட்சி தொடர்பான தகவல்களை வழங்கும் ஊடகச் சந்திப்பொன்று இன்று யாழ் ரில்கோ விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட IYNGARAN MEDIA SOLUTION (PVT) Ltd இன் நிறுவுனர் கார்த்திக் நிகழ்வு தொடர்பான பல விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கட்டட நிர்மாணத்துறைச் சபைடன்  இணைந்து  இந்தக் கண்காட்சியை இலங்கையின் முன்னணி விளம்பரப்படுத்தல் மற்றும் தயாரிப்பு நிறுவனமான IYNGARAN MEDIA SOLUTION (PVT) Ltdயின் ஏற்பாட்டில் யாழ் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியில் இலங்கை மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல பங்கேற்கவுள்ளதோடு, துறை சார்ந்த உள்நாட்டின் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், சிறு தொழில் முனைவோர் என அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கும் முகமாகவும் இந்தக் கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோர் 077 888 2700 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளமுடியும் என்றும் அறியத்தரப்பட்டது. (04)

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply