புனிதமான மருத்துவத்துறையில் அசமந்த போக்கால் தவறிழைப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்!

வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் திருப்திகரமானதாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, தவறான மருத்துவ முறையால் அக்கற்றப்பட்டதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போதைய நிலையில் நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக செல்வோரிடம் வைத்தியர்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர்.

மருத்துவத் துறை என்பது மிகவும் புனிதமான தொழில் அவ்வாறான துறையில் இருப்பவர்கள் அசமந்த போக்காக இருப்பது மிகவும் வேதனையான விடயம் எனத் தெரிவித்த அவர், அரசாங்க நிர்வாகம் இவ்வாறான தவறிழைத்தவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து சட்ட ரீதியான தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நீதிமன்ற கட்டளையை மதமிக்காத, இனவாதமாக செயற்படுகின்ற சூழலில் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிபதிகளின், குறிப்பாக தமிழ் நீதிபதிகளின் தீர்ப்புக்களை தான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் எனத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில், தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளில் நீதிமன்றை அவமதிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக அவர் செய்து வரும் நிலையில், ஜனாதிபதி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடே எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மேர்வின் சில்வா உள்ளிட்ட சிலர் அண்மையில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தேசிய நல்லிணக்கத்தைப் பாதிப்பதோடு, அதற்கும் அப்பால் இனக் கலவரத்தை தூண்டும் செயற்பாடாகவே காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply