இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் 8 புதிய அமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்களை அரச தலைவர் என்ற ரீதியில் வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த மறுசீரமைப்பின் போது நான்கு புதிய நியமனங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் பல அமைச்சர்கள் பதவி பறிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாதத்திற்குள் பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்படும் என தென்னிலங்கை அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம் குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுக்குள் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.