சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியுதவியில் மீளாய்வு குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் குழு 14 மற்றும் 27 ஆம் திகதிக்கு இடையில் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அதன் ஊடக பேச்சாளர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
2023 மார்ச் மாதத்தில், இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக, 48 மாத நீட்டிக்கப்பட்ட வசதியின் கீழ் சுமார் 3 பில்லியன் டொலர்களை வழங்க அனுமதி வழங்கியிருந்தது,
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, ஏழை மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்கள் மீதான பொருளாதார தாக்கத்தை தணிப்பது, நிதித்துறை ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நிர்வாக திறனை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் முடிவை அடுத்து இலங்கைக்கு முதற்கட்டமாக சுமார் 333 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.