வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1400ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதோடு, கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன.
இந்த நிலநடுக்கத்தால், மொராக்கோ தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஸ்பெயின், பிரித்தானியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 வெளிநாட்டு மீட்பு உதவிகளை மொராக்கோ தற்போது ஏற்றுக் கொண்டு இருப்பதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.