கொழும்பில் முடங்கிய ரயில்சேவை – பேச்சுவார்த்தையின் பின் வழமைக்கு!

ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பல மாதங்களாக ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாததால், இன்று காலை இத்தொழிலாளர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் போராட்டத்தை கைவிட்டதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையில், காலை 10.40 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும் டிக்கிரி மெனிகே புகையிரதம் உட்பட 10 மணிக்கு பின்னர் இயக்கப்படவிருந்த ஆறு பிரதான புகையிரத பயணங்களை புகையிரத திணைக்களம் இரத்துச் செய்ய வேண்டியிருந்தது.

காலை மற்றும் மதியம் இயக்கப்பட்ட ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டதால், ரயில்வே பொது மேலாளருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், எதிர்வரும் 25ஆம் திகதி உதவித்தொகை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், மதியம் 2.30 மணியளவில் தொழிற்சங்க போராட்டத்தை முடித்துக்கொள்ள ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

குறித்த பணிபகிஸ்கரிப்பு காரணமாக மாலை நேர ரயில் இயக்கத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply