பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச தரத்திற்கு அமைய பின்பற்றும் வரை அதனை பயன்படுத்துவதை இலங்கை இடைநிறுத்திவைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல், பலவந்தமாக காணாமல்செய்யப்பட்ட பல சம்பவங்களிற்கு தீர்வை காணவும் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 54 ஆவது அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
அமைதியான ஒன்றுகூடல் உரிமையை உறுதி செய்யவும் அவர்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பதை தவிர்க்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
பொறுப்புக்கூறல் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை நிறுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.