முருகானந்தா கல்லுரியில் முன் வீதிக் கடவையில் பொலிசாரின் பணி மிக மந்தமென குற்றச்சாட்டு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் சுமார் 550 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

முருகானந்தா ஆரம்பப் பாடசாலையில் 300 க்கும் அதிகமான மாணவர்கள் கற்கின்றனர்.

கற்றல் செயல்பாட்டிற்கு இந்தப் பாடசாலைக்கு பல பகுதிகளிலிருந்தும் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகளில் கற்றல் நடவடிக்கைக்காக பல மாணவர்கள் வருகின்றனர்.

இத்தகைய நிலையில், பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதிக்கடவையில் காலை வேளையில் மாத்திரமே பொலிசார் வீதிக் கடமைக்கு வருவதாகவும், மதியவேளையில் பாடசாலைக் கற்றல் செயல்பாடுகள் முடிவடையும் நேரத்தில் பொலிசார் வீதிப் பாதுகாப்புக் கடமைக்கு வருவதில்லை எனவும் பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.

முரசுமோட்டை முருகானந்தா கல்லுரிக்கு முன்னாலுள்ளது வீதிவிபத்துக்கள் அதிகம் நடைபெரும் ஏ-35 பிரதான வீதியாகும்.

எனவே, மணவர்களின் நலன் கருதி, பொலிசார் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என அனைவரும் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply