கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி முதல் மே 11 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குழு வன்முறையின் போது வீடுகளுக்கு சேதம் விளைவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமாயின், அந்த வன்முறைக்கு மத்தியில் தீவைக்கப்பட்ட பேருந்துகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, கிட்டத்தட்ட 50 தனியார் பேருந்துகள் முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, மேலும் 50 பேரூந்துகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பணம் போதுமானதாக இல்லை எனவும் அமைச்சர்களுக்கான இழப்பீடுகளை குறிப்பிட்ட அளவிற்கு பெற்றுக்கொடுக்க அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எங்கள் பேருந்து உரிமையாளர்களில் ஒரு பகுதியினருக்கு கூட இந்த இழப்பீடு கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.