பயணசீட்டு பரிசோதனையை அதிகரிக்க இலங்கை ரயில்வே நடவடிக்கை!

பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக  மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது ரயில் பயணிகளின் பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது, இதன் விளைவாக டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில்,  ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை மருதானை புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்த பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 225,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு பெறாமல் புகையிரதத்தில் பயணித்த 72 பயணிகளிடமிருந்து இந்த அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply