வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்ததன் பின்னர், வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
திறந்த பொருளாதார கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பை கருத்திற்கொண்டே, இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
தற்போதைய நிலைமையில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை.
எதிர்வரும் காலப்பகுதியில் அந்நிய செலாவணியின் கையிருப்பின் அடிப்படையில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.