இணையவழி  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது!

இணையவழி  பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று  பிற்பகல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என சமூக செயற்பாட்டாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையவழி  பாதுகாப்பு மசோதாவின் விதிகள் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட சில அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் மேலும் கூறியுள்ளார்.

இதனால், சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவைக் கோரி உடுவரகெதர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply