வவுனியா மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அப்பிரதேச மக்களைஅவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை,    இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள்  நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் நிற்பதைத்  தவிர்க்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுடன் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை  கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவிலான மழை பெய்யக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply