எதிர்வரும் 15ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் ஏதேனும் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில் உள்ள வேறு பரீட்சை நிலையத்துக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டடே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.