கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலாசாலையின் முன்னோடிகளாகக் கொள்ளப்படும் சேர் பொன்னம்பலம் இராமநாதன் காரைநகர் அருணாசலம் உபாத்தியாயர் கோப்பாய் சுவாமிநாதன் அதிபர் பொன்னையா போன்ற பதினெட்டு பெருந்தகைகளது வேடங்களை தாங்கிக் கலந்து சிறப்பித்த நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் 98/99 அணியினர் 19.10.2023 காலை 7.30 மணிக்கு முன்னெடுத்தனர்.
பாடசாலை அதிபர் சாந்தினி வாகீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் கலந்து சிறப்பித்தார்.
ஆசிரிய கலாசாலை அதிபர் ச லலீசன் பிரதி அதிபர் க செந்தில்குமரன் ஒட்டி சுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி. நாகேந்திரராஜா மற்றும் கலாசாலை சமூகத்தினர் பலர் இந்நிகழ்வில் கலந்து கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய சமூகத்தினரைப் பாராட்டினர்.