நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவரால் தாம் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நேற்று இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் தாம் காயங்களுக்கு உள்ளானதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மூன்று மணி நேரத்தின் பின்னர் அவர் வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
டயானா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் விசேட குழுவொன்றும் சபாநாயகரால் நியமிக்கப்பட்டுள்ளது.