வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 318 மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மோசடிகள் இடம்பெற்றிருந்தால் விசாரணை நடத்துவதற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் எனவும் குறுகிய அரசியல் நோக்கங்களினால் இந்த நடவடிக்கையை மீளப்பெற முடியாது எனவும் இது தொடர்பான அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டணச் சலுகையுடன் வழங்கப்பட்ட 119 உரிமங்களை முறைகேடாகப் பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவில் அண்மையில் தெரியவந்துள்ளது.

குறித்த வாகனங்களில் 75 வீதம் ஒரு நிறுவனத்தினால் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply