பிரதமர் தினேஷ் குணவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு முறையின் முன்னேற்றம், அரசாங்கத்தின் இடைக்கால மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நீண்ட கால திட்டங்களுக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிவாரண திட்டங்கள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கு பிரதமர் எடுத்துரைத்தார்.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் பி.கே.ஜி ஹர்ச்சந்திர ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது கடன் தவணை எப்போது கிடைக்கும் என தன்னால் உறுதியாக கூற முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.