மாவீரர் துயிலும் இல்லங்களில் கால் பந்து விளையாடும் இராணுவம்!

வன்னி தமிழ் மக்கள் தமது உறவுகள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை சுத்தப்படுத்தி மாவீரர் தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

முல்லைத்தீவு, விசுவமடுவில் அமைந்துள்ள தேராவில் புதைகுழியை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதை முன்னிட்டு சுத்தப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

7000 முன்னாள் போராளிகள் புதைக்கப்பட்ட தேராவில் மயானத்தில் முன்னெடுக்கப்பட்ட சுத்தப்படுத்தும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்துகொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை கௌரவிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் கனவுகள் நனவாகாவிட்டாலும், அவர்களை போற்றும் மற்றும் அவர்களின் தியாகங்களை தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புதைகுழியின் ஐந்து ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த முன்னாள் போராளிகள் புதைக்கப்பட்ட மைதானத்தில் இராணுவத்தினர் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவதாக குற்றம் சுமத்திய உறவினர்கள், தேராவில் புதைகுழிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply