இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணான அனுலா ஜயதிலக்கவின் பூதவுடல் இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கலசத்தைப் பெறுவதற்காக அவரது உறவினர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் பிரசன்னமாகியிருந்தது.
இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேலில் உள்ள பெட்டா திக்வாவில் அவரது உடல் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.
கடந்த 22 ஆம் திகதி, இறந்த இலங்கைப் பராமரிப்பாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, அவர் முதலில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் இறந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.
அந்தவகையில், தொடர்புடைய மரபணு மாதிரிகளை இஸ்ரேலுக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ள நிலையில், அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் சகோதரியிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு உரிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் அண்மையில் இஸ்ரேலில் நடத்திய தாக்குதல்களில் ஜெயதிலக்க கொல்லப்பட்டது கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் வெடித்த வன்முறைகளுக்கு மத்தியில், இஸ்ரேலில் இரண்டு இலங்கைப் பெண்கள் காணாமல் போனதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவரான ஜயதிலக்க இஸ்ரேலிய அதிகாரிகளால் மரணமடைந்ததை உறுதிப்படுத்தபட்டது. குறித்த பெண் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்குப் பிறகு டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் அவரது அஸ்தி பெறப்பட்டது.