தேசிய புலனாய்வு பிரிவுடன் ஒன்றிணைந்த வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய சமூக புலனாய்வு பிரிவு, தனது கடமைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை கட்டமைப்பிற்குள் இடம்பெறும் பல்வேறுபட்ட தவறான நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் தேசிய கெடட் படையணியுடன் இணைந்து சமூக புலனாய்வு பிரிவை நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளதாகவும், அதன்படி, பாடசாலைகளில் போதைப்பொருள் மற்றும் தவறான செயல்களின் அபாயங்களைக் குறைக்கவும் அகற்றவும் இந்த புலனாய்வுப் பிரிவு செயற்படவுள்ளது.
மேலும், இளைஞர்கள் மத்தியில் இருந்து வீரர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.