இரண்டு அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான இரண்டு அதிவிசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரனவும் சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபாலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்றையதினம் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மாபா பத்திரன, எதிர்வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை ஒரு மாத காலத்திற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக தனது புதிய பதவியில் பணியாற்றுவார்.
இதேவேளை, வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால, நவம்பர் 20 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு சுகாதார அமைச்சின் செயலாளராக தனது புதிய பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.