இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவி விலகும் கோபால் பாக்லே, பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்றையதினம் பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவை வழங்கிய முதல் நாடு இந்தியா என்றும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், இந்திய உயர்ஸ்தானிகர் பதவி வகித்த காலத்தில் இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்காக சபாநாயகர் பாராட்டினார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.