சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் என அழைக்கப்படும் நாட்டின் தேசிய விமான நிறுவனமான சவூதியா மிக விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சவூதி அரேபிய இராச்சியத்தின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் பின் அலிபிரஹிம் அறிவித்துள்ளார்.
2023 நவம்பர் 26ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்ததுடன் அங்கு சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை உள்ளடக்கிய பொருளாதார வரைபடத்தை உருவாக்குவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.